எமது நோக்கு

“ செயற்றிறன் மிக்க சேவையின் ஊடாக பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றல் ”

எமது கொள்கை

அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.
 
நுழைவு வழிகள்

கொழும்பில் இருந்து – காலி வீதியில் மொரட்டுவைச் சந்திக்கு அண்மையாக 500 மீற்றர் தொலைவில் கொழும்புத் திசையில் மொரட்டுவை பிரதேச செயலாளர் அலுவலகம் அமைந்துள்ளது.
 
பாணந்துறையில் இருந்து புதிய காலி வீதி அல்லது பழைய காலி வீதியில் 8 மீற்றர் தூரம் மாத்திரம் வரும்போது காலி வீதிக்கு அண்மையில் மொரட்டுவை பிரதேச செயலாளர் அலுவலகம் அமைந்துள்ளது.
 

மொரட்டுவை பிரதேச செயலாளர் பிரிவின் வரலாற்றுப் பின்னணி


மொரட்டுவை வரலாற்றில் பல்வேறு கர்ண பரம்பரைபக் கதைகள் உள்ளன.


முற்காலத்தில்  மொரட்டுவையில் மொர (அலரி) மரக் காடு இருந்ததென்றும், அது மொர அட்டுவை, மொரட்டுவை என்று திரிந்தது என்று கர்ணபரம்பரைக் கதை உண்டு.மொரட்டுவை பிரதேச செயலாளர் பிரிவு அமைவிடம், எல்லைகள் மற்றும் அடையாளம் காணல்.
கொழும்பு மாவட்டத்தில் மேற்குத் திசை எல்லை மற்றும் தெற்குத் திசை எல்லை சந்திக்கும் இடத்தில் மொரட்டுவை பிரதேச செயலாளர் பிரிவு அமைந்துள்ளது.
24.4 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள பிரதேசம் இந்த பிரிவில் அடங்கும்.  மூன்று பக்கத்திலும் இயற்கை எல்லைகளால் சூழப்பட்டிருப்பது இந்த பிரிவின் சிறப்பு அம்சமாகும்.
1978இல் மொரட்டுவைப் பிரதேசத்தில் உதவி அரசாங்க அதிபர் அலுவலகம்  ஆரம்பிக்கப்பட்டது.

மொரட்டுவை பிரதேச செயலாளர் பிரிவின் வரலாற்றுப் பின்புலம்.


மொரட்டுவை என்பது யாதேனும் பட்டப் பெயரா என்று அடையாளம் கண்டு கொள்வதற்கு பல்வேறு கர்ணபரம்பரைக் கதைகள் உள்ளன. அவற்றை கீழே குறிப்பிட்டுள்ளவாறு சுட்டிக் காட்டலாம்.
1.  கி. பி. 1348ம் ஆண்டளவில் 5 வது பெரகும்பா அரசன் தெதிகம்புரத்தை ஆட்சிசெய்தபோது எழுதப்பட்டது என்று கதைப்படுவது திசர சந்தேசய என்ற நூலாகும்.அதில் “நெத்து சித்து சனசமின் நொசலவ மொரட்டுவ எலியே” என்று எழுதப்பட்டுள்ளது.
2. கிரா சந்தேசய என்ற நூலில் “கவபல் கெலின கெலியெனயவ இட்டு மொரட்டு எலியென்” என்று எழுதப்பட்டுள்ளது.
3. இலக்‌ஷபதிய என்ற பெயருடைய கிராமத்தில் தென்னைப் பூங்கா ஒன்று இருந்ததாக கோகில சந்தேசய என்ற நூலில் காணப்படுகின்றது.
4. முற்காலத்தில் மொரட்டுவையில் மொரமரக் காடு இருந்தது என்றும் மொரமரக் காடு மொர அட்ட என்றாகி பின்னர் முர அட்டுவ என்றும், பிற்காலத்தில் மொரட்டுவை என்று வளர்ச்சி பெற்றது என்றும் கர்ண பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
5. மொராட்டா என்பது சமஸ்கிருத மொழியில் மோருக்கு பயன்படுத்தப்பட்டது என்றும், அதற்கு அமைய  மொரட்டுவை என்று வளர்ச்சி பெற்றது என்றும் இன்னொரு கர்ண பரம்பரைக் கதை உண்டு.
மொரட்டுவை முற்காலத்தில் கீழ்க் குறிப்பிட்டுள்ளவாறு பிரிக்கப்பட்டு இருந்தது

1  மொரட்டு எலிய  கல்தெமுல்லை, தெலவளை, இரத்மலானை, பொருப்பனை. 
2  மொரட்டு பிட்டிய       கட்டுபெத்தை, குடுவாமுல்லை
3  மொரட்டு உயன  உயன, இராவத்தாவத்தை, அங்குலானை, இலக்‌ஷபதிய.
4  மொரட்டுமுல்லை  மொரட்டுமுல்லை, கடலானை, வில்லோராவத்தை, மோல்பே, இந்திபெத்தை
5  மொரட்டுவெல்லை        திகரொல்லை, ஹொரேகெலே.
6  மொரட்டுதிக்வெல்லை  கொரலவெல்லை, கட்டுக்குருந்தை, எகொட உயன என்றவாறு.

மொரட்டுவை பிரதேச செயலாளர் பிரிவுக்கு தற்போதுள்ள எல்லைகள் காலத்துக்கு காலம் மாற்றம் அடைந்துள்ளன என்று குறிபிடப்படுகின்றது. கி. பி. 1735 ம் ஆண்டில் ஒல்லாந்தர்களால் கொரலவெல்லை, மொரட்டுவைக்கு உட்பட்ட பிரதேசமாகப் பெயரிடப்பட்டது. கி. பி. 1835 ம் ஆண்டில் பிரித்தானிய ஆட்சியின் போது கட்டுக்குருந்தை மற்றும் எகொட உயன என்பன மொரட்டுவையுடன் இணைக்கப் ப ட்டன.
1930 ஆம் ஆண்டில் மொரட்டுவை நகர சபை ஆரம்பிக்கப்பட்டபோது 08 பிரிவுகள் இருந்தன. 1941 ஆம் ஆண்டில் 10 பிரிவுகளம், அதற்குச் சிறிது காலத்தின் பின்னர் 12 பிரிவுகளாகி 1972 ஆம் ஆண்டில் எல்லை மேலும் விரிவடைந்து இன்றைய எல்லைகளாக கொள்ளப்படும் மொரட்டுவை நிர்வாக அலகிற்கு உரித்தாகின. மொரட்டுவை நகர சபை எல்லைக்குள் அடங்கும் பிரதேசம் மொரட்டுவை பிரதேச செயலகப் பிரிவின் எல்லைக்குள் அடங்குகின்றது.


1978 இல் இருந்து இன்று வரைக்கும் மொரட்டுவை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கடமையாற்றிய செயலாளர்கள்.
 பெயர்    சேவைக் காலம்

 பெயர் இலிருந்து வரை
 திரு.சனீ விக்கிரமசூரிய 1978 1980
 திரு.தயானந்த கலப்பதி 1980 1989
 திரு.ஏ. ரி. கே. சந்திரதாஸ 1989 1992
 திரு.கே.  ஆர்.  பி.  டப். கருணாரத்ன 1992 1995
 திரு.ஏ. கே. தர்மதாஸ 1995 2002
 திரு.பி ஹேவகே 2002 2003
 திரு.டப். நெல்சன் ஜயக்கொடி 2003 2005
 திரு.பி. எச். எல். விமலசிரி பெரேரா 2005 2006
 திரு.ஏ. டி. தயாரத்ன 2006 2007
 திரு.பீ. கே. சோமபால 2007 2008
 திரு.பீ. எஸ். விமலசிரி 2008 2011
 திரு.கே. சி. நிரோசன் 2011 மே 2016 ஜூன்
 திருமதி.எச்.ஆர்.எச்.கருணாரத்ன 2016 ஜூன் இன்று வரை

 

News & Events

23
அக்2019
cultural Festival "Deshabimani 2019"

cultural Festival "Deshabimani 2019"

Moratuwa Divisional Secretariat held cultural festival "Deshabimani...

03
பிப்2019
பிரித் பூஜை 2019

பிரித் பூஜை 2019

மொறட்டுவை பிரதேச செயலகத்தினால் சுதந்திர தினத்தை முன்னிட்டு  வருடாந்த...

குடியுரிமை சாசனம்

Scroll To Top